Thursday, November 3, 2011

முன்னாள் புலிகளை புனருத்தாருனம் செய்ய நோர்வே 57 மில்லியன் வழங்கியுள்ளது.

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களை சமூகமயப்படுத்தும் சர்வதேச சமூகத்தின் உதவி திட்டத்தில், நோர்வேயும் இணைந்துள்ளது. கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம், 57 மில்லியன் ரூபாநிதி உதவியை இதற்காக வழங்கியுள்ளது. முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஐ.ஒ.எம். நிறுவனத்திற்கே, இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களின் குற்றச்செயல்களின் தீவிரத்தை பொறுத்து, தொகுதிவாரியாக இலங்கை அரசாங்கம் சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் 400 முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்டனர்.

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து, சமூகமயப்படுத்துவது ஒரு சிரமமான காரியமாகும். புள்ளிவிபரங்களின் அடிப்படையில், முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களை சமுதாயம் ஏற்றுக்கொள்வதில் சில சிரமங்கள் இருப்பதனால், பெரும்பாலான விடுவிக்கப்பட்ட முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள், தமது சொந்த வீடுகளில் வசிப்பதில்லை. இதனை நன்கு உணர்ந்து கொண்ட இந்தியா, நோர்வே உட்பட பல நாடுகள், இந்நிலைமையை சீர் செய்வதற்கும், சமூகத்தை இது தொடர்பில் விளக்கமூட்டுவதற்கும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன்மூலம் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் கிரமமான முறையில் சமூகமயப்படுத்தப்பட்டு, அதன் மூலம்யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வாழ்க்கை நிலை வழமைக்கு திரும்பி வருவதை, அவதானிக்க முடிகிறது. தன்னிறைவு பெற்ற பெண்கள் குழுக்களை உருவாக்குவதிலும், தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதிலும், இந்தியா கூடிய கவனம் செலுத்தியுள்ளது.

இதேநேரம் தாயகத்திற்கு எதிரானவர்களை தாயகத்திலேயே, நல்வழிப்படுத்தி, புனர்வாழ்வு திட்டங்களை துரிதமாக மேற்கொண்ட ஒரே நாடு, இலங்கையென, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்திட்டத்தை கண்காணிப்பதற்கும், இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்கும், இந்திய சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் செய்தது. வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற இவர்கள், இலங்கையின் புனர்வாழ்வு வேலைத்திட்டங்கள், முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியென, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment