சிங்கள திரைப்பட நடிகை 50 இலட்சம் ரூபாவுடன் தலைமறைவு
பிரபல சிங்கள திரைப்பட நடிகை ஒருவர் இங்கிலாந்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 30பேர் வரையான இளைஞர் யுவதிகளை ஏமாற்றி 50 இலட்சம் ரூபா வரையான பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது..
நீர்கொழும்பு – கட்டுவபிட்டிய பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ள சந்தேக நபரான நடிகை நாட்டின் பல பிரதேசங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளை ஏமாற்றி ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரையான பணத்தை ஒருவரிடமிருந்து பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிசில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் படப்பிடிப்பை மேற்கொள்ளவுள்ள தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகளை அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு,தூதுவராலயத்தில் போலி ஆவனங்களை சமர்பித்து, இந்த இளைஞர் யுவதிகளை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதாக்க் கூறி குறித்த நடிகை ஏமாற்றியுள்ளார்.தற்போது தான் நடத்தி வந்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை மூடி விட்டு குறித்த நடிகை தலைமறைவாகியுள்ளார்
0 comments :
Post a Comment