Sunday, November 27, 2011

சிறைக்கைதிகளின் மனித நேயம். 500 க்கும் மேற்பட்டோர் கண்களை தானம் செய்கின்றனர்.

சிறையிலும் மனிதநேயத்தை மறக்காதவர்களும், உள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் உள்ள 500 க்கும் மேற்பட்ட கைதிகள், தமது கண்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய, இலங்கை கண்தான சங்கம், போகம்பர சிறையில் நடாத்திய செயலமர்வின் இறுதியில், 100 கைதிகள், தமது கண்களை தானமாக வழங்க, விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனையை போன்று, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளே, கண்களை தானமாக வழங்க முன்வந்துள்ளமை, விசேட அம்சமாகும். பல கைதிகள், கண்களை மாத்திரமன்றி, தமது உடலையும், வைத்திய பீடத்திற்கு பொறுப்பளிக்க, விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்க உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர், கைதிகளை ஊக்குவிக்கும் வகையில், தமது கண்களையும், உடலையும் தானமாக வழங்க, முன்வந்துள்ளனர்.

No comments:

Post a Comment