Tuesday, November 8, 2011

சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய 41 பேரை திருப்பி அனுப்ப உத்தரவு.

சுவிட்சர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 41 இலங்கை அகதிகளை, அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள், அரசியல் தஞ்சம் கோரி, விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், தமிழர்களாவர். எல்ரிரிஈ பயங்கரவாதம் நிலவிய காலகட்டத்தில், இவர்கள் சுவிட்சர்லாந்தில் பிரவேசித்துள்ளனர். ஆனால், இலங்கையில் தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, அமைதி சூழல் நிலவுவதால், இவ்வகதிகளை அங்கிருந்து வெளியேறுமாறு, சுவிட்சர்லாந்து சமஷ்டி நீதிமன்றம், அண்மையில் உத்தரவிட்டது.

இலங்கை அகதிகளை வெளியேற்றுவதற்கு, சுவிட்சர்லாந்து செனட் சபை தீர்மானித்துள்ளதனால், அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களது கோரிக்கையை நிராகரித்த சுவிட்சர்லாந்து நீதிமன்றம், இலங்கையின் தற்போதைய நிலைமை, சுமூகமடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, அரசியல் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதி சூழலின் மத்தியில், இலங்கைக்கு திரும்பி சென்று, சுதந்திரமாக வாழும் வாய்ப்பு, அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதாக, சுவீட்சர்லாந்து நீதிமன்றம், தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment