இத்தாலிய நகரொன்றுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 4 சிங்களவர்கள்
வெளிநாட்டவர்களுக்கான பிரதிநிதிகளை தனது மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தெரிவு செய்வதற்காக இத்தாலியின் பாதோவா (Pயனழஎய) என்னும் மாநகர சபை ஒரு தேர்தலை 27ம் திகதி 11ம் மாதம் 2011ம் ஆண்டு நடாத்தவுள்ளது. இதில் வயது வந்தோர்கள் (18) அதிலும் இத்தாலி தேசியத்தையோ, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தேசியத்தை உடையோர்கள் தவிர ஏனைய வெளிநாட்டவர்கள் மட்டும் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
ஐந்து வருடங்களுக்குப் பின் நடத்தப்படும் நகர சபைத் தேர்தலில் என்டன் ரொசான், சஜீத் பெர்னாண்டோ, சுனில் ஹேமசிரி, சேஹான் சில்வா ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் சின்னங்கள் ஏணி. பெல்ட். மோட்டார் சைக்கில். தொப்பி போன்றவைகளாகும்.
இலங்கையர்கள் 962 பேர் பாவோதா பிரதான நகரப் பிரதேசத்திற்குள் நிரந்திர வதியிவிடத்தைக் கொண்டுள்ளனர். தேர்தல் வாக்களிப்புத் தொகையில் கூடுதலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் நகரின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யடுவர்................................
0 comments :
Post a Comment