Saturday, November 12, 2011

கடந்த ஏழு வருடங்களில் 4 இலட்சத்து 58 ஆயிரத்து 991 குற்றச்செயல்கள் பொலிஸில் பதிவு

நாட்டில் 2004 முதல் 2011 செப்டம்பர் மாதம் வரையில் நான்கு இலட்சத்து 58 ஆயிரத்து 991 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன என்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடுகளில் இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 760 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பதில் எதிர்கட்சி தலைவர் ஜோன் அமரதுங்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2011ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 40 ஆயிரத்து 560 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 16 ஆயிரத்து 406 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி கூறுவதானால் காதல் விவகாரங்களின் காரணமாக இடம்பெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பெற்றோர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன என்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் நிகழ்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றுஅ மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்கும் அதனை கட்;டுப்படுத்துவதற்கும் நீதியமைச்சும் சட்ட மா அதிபர் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இது தற்போது கம்பஹா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மேலும் குறிப்பிட்டார்

...............................

No comments:

Post a Comment