கிழக்கு மாகாணத்தில் 3440 துப்பாக்கிகள்காவல் துறையிடம் ஒப்படைப்பு.....
கிழக்கு மாகாணத்தில் கடந்தவாரத்தில் சுமார்3440 துப்பாக்கிகள் , காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொதுக்களிடம் இருக்கும் துப்பாக்கிகளை உடனடியாக கையளிக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, கந்தளாய், திருகோணமலை காவற்துறைப் பிரிவுகளில் வசித்து வரும் பொதுமக்கள் தம்மிடம் உள்ள துப்பாக்கிகளை காவற்துறையினரிடம் கையளித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளதுடன். அதன் பின்னர் சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்ற பாரிய தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன தெரிவித்துள்ளார்.
காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்ட பெருபாலான துப்பாக்கிகள் போர் நடைபெற்ற காலத்தில் சிங்கள கிராமங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமையாகும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் சிலர் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து அரசாங்கம் சிங்கள கிராமவாசிகளுக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற தீர்மானித்தது.
இதனடிப்படையில், கடந்த வாரத்தில், அம்பாறை மாவட்டத்தில், 2 500 துப்பாக்கிகளும், திருகோணமலையில்,380 துப்பாக்கிகளும், கந்தளாய் பிரதேசத்தில் 560 துப்பாக்கிகளும் மீளப்பெறப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment