பிரித்தானியாவில் 34 வாகனங்கள் மோதி தீ பிடித்ததில் 7 பேர் ஸ்தலத்திலேயே பலி.
இங்கிலாந்தில் சோமர்செட் நகரில் எம்.5 நெடுஞ்சாலை செல்கிறது. இது எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மூடு பனி கொட்டியது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் சரிவர தெரியவில்லை. இதை தொடர்ந்து சோமர்செட் அருகேயுள்ள டவுன்டைன் ரக்பி கிலிப் அருகே வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து அவற்றின் பின்னால் வந்த வாகனங்களும் கடுமையாக மோதின.
அதிவேகமாக வாகனங்கள் மோதிக் கொண்டதால் பெட்ரோல் டேங்குகள் உடைந்து தீப்பிடித்தன. இதுபோன்று 34 வாகனங்கள் வரிசையாக தீப்பிடித்து வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பந்து போல் தீப்பிழம்பு வாகனத்தில் இருந்து எழுந்து எரிந்தது. எனவே அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகினர். 51 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 23 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இச்சம்பவத்தில் 34 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அவற்றில் பெரும்பாலானவை லாரிகள். விபத்தை தொடர்ந்து அங்கு போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சுமார் 5 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment