Saturday, November 5, 2011

30 இலங்கையர்களை கைதுசெய்வதற்காக இண்டர்போல் பிடிவிறாந்து பிறப்பிப்பு

இலங்கையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் உள்ளிட்ட வேறு பல மோசடிகளுடன் தொடர்புடைய 30 இலங்கையர்களை கைதுசெய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இண்டர்போல்) பிடிவிறாந்து பிறப்பித்துள்ளனர்.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களில் 6 பேர் பெண்களாவர். இரண்டு வர்த்தகர்கள் மற்றும் முன்னாள் சட்டத்தரணி ஒருவரும் இதில் அடங்குகின்றனர். அத்துடன் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் 16 பேர் சிங்களவர்கள். இவர்கள் கொழும்பு ,குருணாகல், திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசித்து வந்துள்ளதுடன், நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தப்பிச் சென்றுள்ளவர்களில் இரண்டு போதைப் பொருள் வியாபாரிகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment