Friday, November 4, 2011

ரூ. 302 மில்லியன் பெறுமதியான கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்கள் ரஷ்யாவினால் கையளிப்பு!

வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் ரஷ்ய அரசாங்கம் 302 மில்லியன் ரூபா பெறுமதியான கண்ணிவெடி அகற்றும் நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்ற நிகழ்வின் போது இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளாதிமிர் பி. மிக்க லோவ் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜ பக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

அதனை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் படைப் பிரிவின் பயன்பாட்டுக்காக பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விடம் அந்த இடத்தில் வைத்து கையளித்தார்.

18 கோடி 86 இலட்சத்து 74 ஆயிரத்து எழு நூற்று நாற்பத்திரண்டு ரூபா பெறுமதியான எம்.வி 4 ரக கண்ணிவெடிகள் அகற்றும் நான்கு கனரக இயந்திரங்கள், 81 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான குண்டுகள் நுழைக்காத கவச அங்கிகள்- 100, 71 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான பாதுகாப்பான தலைக் கவசம் –100, 3 கோடி பெறுமதியான இரும்பு தகடு அங்கிகள்- 100 மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் பெறுந்தொகையான உகரணங்களையே ரஷ்ய தூதுவர் கையளித்தார்.

ரஷ்ய தூதுவரும், பாதுகாப்புச் செயலாளரும் இதற்கான சான்றிதழ்களை பறிமாறிக் கொண்டதுடன் கண்ணிவெடி அகற்றும் எம்.வி-4 92 இயந்திரத்தை இயக்கி பார்வையிட்டனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே. அமுனுகம, ஜெனிவாவிலுள்ள சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பின் (யிவிளிலி) பிரதிச் செயலாளர் நாயகம் டொக்டர் விலாதிமிர் கெசினோவ், இராணுவத்தின் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் தனன்றித் கருணாரட்ன உட்பட முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com