டுபாயில் மடிக்கணினிகளைத் திருடிய நம்மவர் கைது. 22ம் திகதி தீர்ப்பு
இலங்கை பிரஜையொருவர் டுபாயில் தனது தொழில் புரியும் இடத்திலிருந்து 4 மடி கணனிகளை கொள்ளையடித்த காரணத்திற்காக, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். றோயல் கோட் எனும் இடத்தில் உள்ள பொறியியல் துறை அலுவலகத்தில் வாகன சுத்தீகரிப்பு பணியில் கடமையாற்றிய இவர், ஏற்கனவே 4 மடி கணனிகளை திருடியுள்ளார். மேலும் 18 மடி கணனிகளை கொள்ளையடிக்க முயற்சி எடுத்ததாக, ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நேற்று காலை டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதிக்குமுன்னர், இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் சில கணனிகளை திருட முயன்றபோது, இவர் கைது செய்யப்பட்டார். எச்.பீ. வகை மற்றும் டொஷிபா வகை கணனிகள், அலுவலகத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
குறித்த இலங்கை பிரஜையுடன் அவரது வீட்டிலிருந்து திருடப்பட்ட இரண்டு மடிகணனிகளும், கைப்பற்றப்பட்டதாக, டுபாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் இவர், தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதிநீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும்.
0 comments :
Post a Comment