அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2015ல் இடம்பெறலாம்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015 ஆம் ஆண்ட நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியின் பின்னர் 2015 இல் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரியவருகிறது.
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்திற்காக சத்தியபிரமாணம் செய்ததன் பின்னர் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சத்தியப் பிரமாணத்தின் 4 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அறிவித்தலை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரும் அபிவிருத்தி திட்டங்கள் பல 2014 இல் நிறைவடையவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலைநடத்துவதற்கு பொருத்தமான காலம் 2014 ஆம் வருடமென்று அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment