2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவது நிச்சயம் அதனை நிறுத்துவதற்கு எதிர்கட்சி தலைவரால் முடியாதென அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த விரும்புவதாக 15 நாடுகள் ஒரே குரலில் தெரிவித்துள்ளன. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கையின் சார்பில் முன்நிற்க போவதாக கடந்த சார்க் மாநாட்டில் சகல நாடுகளும் வலியுறுத்தியிருந்தன. சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது எதிர்கட்சி மாத்திரம் நாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பது கவலைக்குரிய விடயமென அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட வேண்டியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், இதற்காக நாளைய தினத்தை ஒதுக்க முடியுமென சபாநாயகர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இன்றைய தினம் அதற்கு இடமளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் தனது களுத்து பட்டியை அவிழ்த்து விட்டார்.
இதனை நினைவு கூர்ந்து அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் எதிர்கட்சி தலைவர் அணிந்து வந்ததது பொதுநலவாய சபை பாராளுமன்றத்தின் களுத்துப்பட்டியாகுமென தெரிவித்தார். அந்த களுத்து பட்டியை அகற்றுவதனால் மாத்திரம் பொதுநலவாய சபை இலங்கையில் நடத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை தடுப்பதற்கு எதிர்கட்சி தலைவரால் முடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment