படையினரின் 3ம் குழந்தைக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் பொலிஸாரின் குழந்தைக்கும்
இறந்த படையினரின் தாய்க்கு 750 ரூ
அரச ஊழியர்களுக்கு 10 வீதம் சம்பளம் அதிகரிப்பு
2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தற்போது பாராளுமன்றில் சமர்பித்துக் கொண்டிருக்கிறார்.
வரவு - செலவு திட்ட பிரேரணையை சமர்பித்து ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிர்கட்சியினர் எதிரப்பு தெரிவித்தனர்.
ஜனாதிபதி எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றி வருவதால் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியுள்ளனர்.
வரவு - செலவு திட்ட பிரேரணையை சமர்பித்து ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில்,
ஊடகவியலாளர் மற்றும் கலைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து கொள்ளவென விசேட நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 25 வருடத்திற்கு மேல் ஊடக மற்றும் கலை சேவையில் உள்ளவர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்ய 11 லட்சம் ரூபா கடன் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு பொலிஸாருக்கும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வழங்கவும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாருக்கு மாதாந்தம் தலா 750 ரூபா கொடுப்பனவு வழங்கவும் வரவு - செலவுத் திட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு பொலிஸாருக்கும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வழங்கவும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாருக்கு மாதாந்தம் தலா 750 ரூபா கொடுப்பனவு வழங்கவும் வரவு - செலவுத் திட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்தில் 8 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,கண்டி, நுவரெலியா, திருக்கோணமலை, இரனமடு, அநுராதபுரம், சீகிரியா ஆகிய பகுதிகளில் உள்நாட்டு விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், கண்டி, நுவரெலியா மற்றும் இரனமடு ஆகிய உள்நாட்டு விமான நிலையங்களை அடுத்த வருடத்தில் அமைக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதிய வாகனக் கொள்வனவு பதிவு வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி மற்றும் பஸ்களுக்கான பதிவு வரி அமுலில் இருக்கும் எனவும், சுற்றுலா துறைக்கென இறக்குமதி செய்யப்படும் பஸ்களுக்கான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை பாராளுமன்றத்தில் தொடரந்தும் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment