Tuesday, November 15, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்றுடன் பூர்த்தி. 20ம் ஜனாதிபதி கையில்

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சபையின் அறிக்கை தயாரிக்கும் பணிகள், இன்று பூர்த்தியடைகின்றன.கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சபையின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகள், உத்தியோகபூர்வமாக இன்று நிறைவடையுமென, அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. இறுதி அறிக்கை, எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியினால், இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. இதுவரையில் ஆணைக்குழுவினால் 57 மக்கள் சந்திப்புகள், நடாத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைமைகளை நேரில் சென்று அவதானிக்கவும், ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது. பகிரங்க அறிவித்தலுக்கமைய, ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன்வந்தனர். இதற்கு மேலதிகமாக, 5 ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட எழுத்து மூல கருத்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment