தேங்கி கிடக்கும் தபால்கள் 2 தினங்களுக்கு விநியோகிப்பட்டுவிடுமாம்
வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக தேங்கி கிடக்கும் தபால்களை 2 தினங்களுக்கு விநியோகிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முடிவடைந்ததையடுத்து தபால்களை தரம் பிரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.
நேற்றைய தினம் 7 இலட்சம் தபால்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை குறித்த பிரதேசங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் அளவில் இப்பிரச்சினை முழுமையாக தீர்த்து வைக்கப்படுமென தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment