Monday, November 14, 2011

18 வயதில் மேயர் ஆன அமெரிக்க மாணவர்.

18 வயது அமெரிக்க மாணவர் மேயர் ஆனார். அமெரிக்காவில் லோவா பகுதியில் ஆர்டால் என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்துக்கான மேயர் தேர்தல் நடந்தது. அதில் போட்டி யிட்ட 18 வயது வாலிபர் ஜெர்மி மின்னியர் வெற்றி பெற்றார். இவர் ஹாம்டன் துமாந்த் என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மேயர் விர்ஜில் ஹோமரை 24 ஏட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாணவர் மின்னியருக்கு அவர் தங்கியுள்ள ஆர்டால் பகுதி மக்கள் அமோகமாக ஓட்டளித்து உள்ளனர்.

ஏனெனில் இப்பகுதியை முன்பு மேயர் பதவி வகித்த விர்ஜில் ஹோமர் கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் இவர் வெற்றி பெற்றார். மாணவர் மின்னியரின் தந்தையும் முன்னாள் மேயர் ஆவார். மின்னியர் வருகிற ஜனவரி 3-ந்தேதி மேயர் ஆக பதவி ஏற்கிறார்.

No comments:

Post a Comment