பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்!!
விமானத்தில் 181 கிலோ எடையுள்ள குண்டு மனிதரின் `அடாவடி'யால் பக்கத்து சீட்டில் இருந்தவர் 7 மணி நேரம் நின்றபடி பயணம் செய்தார். கூட்டநெரிசல் காரணமாக பஸ்சில் நின்றபடி பயணம் செய்து வருவதுண்டு. ஆனால் விமானத்தில் 7 மணி நேரம் நின்று கொண்டே ஒருநபர் பயணம் செய்துள்ளார். அந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆர்தர் பெர்கோவிட்ஷ். இவர் அலாஸ்காவில் உள்ள ஆங்குரோச்சில் இருந்து பிலாடெல்பியாவுக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அவருக்கு 2 பேர் அமரும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு இருக்கையில், 181 கிலோ எடையுள்ள குண்டு மனிதர் அமர்ந்து இருந்தார். அவர் மிகவும் குண்டாக இருந்ததால் பெர்கோவிட்ஷ் இருக்கையின் பெரும் பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டார்.
அதனால் பெர்கோ விட்ஷ் உட்கார இருக்கையில் இடமில்லை. ஆனால், அதை அந்த குண்டு நபர் கண்டு கொள்ளவில்லை. அடாவடியாக அவரது இருக்கையையும் ஆக்கிரமித்து கொண்டார். எனவே, பெர்கோவிட்ஷ் பஸ்சை போன்று விமானத்தில் நின்றபடியே பயணம் செய்தார். ஒரு மணி அல்லது 2 மணி நேரம் அல்ல. 7 மணி நேரம் நின்றபடியே பிலோடெல் பியாவுக்கு சென்றார்.
ஆனால் அதை குண்டு மனிதர் கண்டு கொள்ளாமல் அசட்டையாக அமர்ந்து இருந்தார். இந்த பிரச்சினையை விமான ஊழியர்களும் தீர்த்து வைக்கவில்லை. எனவே, தன்னை 7 மணி நேரம் நிற்க வைத்து பயணம் செய்ய வைத்த அமெரிக்க ஏர்வேஸ் விமான நிறுவனம் மீது பெர்கோ விட்ஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment