தொடரும் தொழிற்சங்க நடவடிக்கையினால் தேங்கிக்கிடக்கும் 16 இலட்சம் கடிதங்கள்
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மாத்திரம் 16 இலட்சம் கடிதங்கள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தபால் மாஅதிபரை பதவி நீக்குமாறு அதிகாரிகளிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இதுவரை சிறந்த பதில் கிடைக்கவில்லை என்று தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எம். சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பிராந்திய தபால் சேவைகளும் செயலிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment