காணாமல்போன 15 ஆயிரம் செல்லிடத்பேசிகள் தொடர்பில் முறைப்பாடு
காணாமற்போன கையடக்கத் தொலைபேசிகள் குறித்து 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள்தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 4000 தொடக்கம் 5000 வரையான கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய கையடக்கத் தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment