1590 பாடசாலைகள் மூடப்படும் நிலையில்
இலங்கையில் உள்ள 9662 பாடசாலைகளில் 1590 பாடசாலைகள் மூடப்படகூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த பாடசாலைகள் யாவும் போதியளவு மாணவர்கள் இன்மையால் மூடப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மூடப்படவுள்ள அபாயத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் 50 இற்கு குறைவான மாணவர்களே கல்வி கற்பதாகவும், போதியளவு கல்வி வசதிகள் அங்கு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8 வருட காலப்பகுதியில் பல பாடசாலைகள் இது போன்று மூடப்பட்டுள்ளதாகவும் , கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசித்தள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.பெற்றோர் தமது பிள்ளைகளை நகரப்புறப் பாடசாலைகளிலும், பிரபலமான பாடசாலைகளிலும் சேர்பதற்கு நாட்டம் காட்டுவதே இந்நி லைக்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.
1 comments :
It's a crime to close down the schools,these schools can be changed
as primary schools with a good start to the children,with experienced primary school teachers.At no circumstances schools should not be closed down,as the education is the best investment to every children by the government.
Post a Comment