Wednesday, November 2, 2011

1.5 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் மன்னாரில் கைதானோருக்கு விளக்க மறியல் .

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ நிறை கொண்ட கெரோயின் போதைப்பொருட்களை தலைமன்னார் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மீட்டுள்ளதோடு இளம் தாய் ஒருவர் உற்பட நான்கு பேரை கைது செய்திருந்தனர்.

குறித்த நான்கு பேரையம் தலைமன்னார் பொலிஸார் திங்கட்கிழமை மதியம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவரானி முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் 14 தினங்கள் (இம்மாதம் 14 ஆம் திகதி )வரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வீட்டில் சோதனைகளை மேற்கொண்ட தலைமன்னார் பொலிஸார் அங்கிருந்து ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெருமதியான ஒன்றரை கிலோ நிறை கொண்ட கொரோயின் போதைப்பொருளை கைப்பற்றினர்.

இதன் போது குறித்த வீட்டில் இருந்த பெண் ஒருவரை கைது செய்ததோடு மன்னார் நகரைச் சேர்ந்த மேலும் 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் எழுத்தூரைச் சேர்ந்த ஏ.என்.ராஜன் மோசஸ், மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த முகமட் குளாம் நஸ்சான், மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த பிரகொரி பிகிராடோ அன்றன் சிறில் மற்றும் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி சேவியர் டெனிஸ்டா ஜீவதி ஆகிய நான்கு பேருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

பின் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேரும் கடந்த புதன் கிழமை மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 4 பேரையும் கடந்த 31 ஆம் திகதி வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்று 31 ஆம் திகதி மீண்டும் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கு மாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

1 comment:

  1. Thanks and congratulations to the Police officers who arrested them. All the four culprits should be given maximum punishments as a lesson to those who are involved in this type of smuggling.

    ReplyDelete