கள்ளத் தொடர்பு கையும் மெய்யுமாக பிடிபட்டது. 12வது மனைவியை விரட்டிய மன்னர்.
ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் மெஸ்வதியின் 12வது மனைவி நீதித்துறை அமைச்சருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததையடுத்து அவர் அரண்மனையில் இருந்து விரட்டப்பட்டார். ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடந்து வருகிறது. அந்நாட்டை மூன்றாம் மெஸ்வதி (43) ஆண்டு வருகிறார். அவருக்கு 13 மனைவிகள், 23 குழந்தைகள். அதில் 12வது மனைவி இன்கோசிகடி லாதுபே (23).
இன்கோசிகடி தனது 16வது வயதில் மன்னரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவருக்கும் நீதித்துறை அமைச்சருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ம்மாபனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் உல்லாசமாக இருந்தபோது கையும், களவுமாக சிக்கினர்.
அதில் இருந்து லாதுபே வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரது 3 குழந்தைகளையும் பறித்துக் கொண்டு மன்னர் அவரை அரண்மனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்.
இது குறித்து லாதுபே கூறியதாவது,
ம்பாபனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் நானும், நீதித் துறை அமைச்சரான மம்பாவும் உல்லாசமாக இருக்கும்போது மன்னரிடம் பிடிபட்டோம். இதையடுத்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டேன்.
கடந்த 12ம் தேதி திடீர் என்று என்னை அரண்மனையை விட்டு வெளியேறுமாறு உத்தரவு வந்தது. இதற்கிடையே எனது மூன்றாவது மகனுக்குக விளையாடும்போது அடிபட்டு ரத்தம் வந்தது. அவனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முயன்றேன்.
ஆனால் பாதுகாவலர் என்னை குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. என்னைத் தாக்குவேன் என்றும் மிரட்டினார். என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவரது கண்ணில் மிளகு பொடியைத் தூவினேன்.
இந்த விவகாரம் ராஜமாதாவின் காதுகளுக்கு எட்டியது. அவர் என்னை அரண்மனையை விட்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டார் என்றார்.
ஆனால் லாதுபேயை அரண்மனையை விட்டு வெளியேற்றவில்லை என்று அரண்மனை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment