நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேரை காணமல் போயுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதோடு 18 பேர் காயமடைந்துள்ளதுடன் 33 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கணிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.
தென் மாகாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக இதுவரை 30 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நேற்று முற்பகல் வீசிய கடும் காற்றினால் தென் மாகாணத்தில் காலி ,மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்த அனர்த்த நிலைமையினால் ஆயிரத்து 200ற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ,இன்றைய தினத்திலும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது கடும் காற்று வீசுவதுடன் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment