சர்வதேசம் இலங்கைமீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறதாம். US Congress
இலங்கைக்குச் சர்வதேசத்தின் பாராட்டுகள் உயர்ந்த மட்டத்தில் கிடைக்க வேண்டுமென அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் கொடிய பயங்கரவாதத்தை இலங்கை தோல்வியடையச் செய்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பல்வேறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது கவலைக்குரியது எனவும் அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கக் காங்கிரஸ உறுப்பினர் எல்பெர்ட் பென்ஜமின் தலைமையில் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் தான் இலங்கை வந்தபோது இருந்த நிலையை விட தற்போது இலங்கை பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக எல்பெர்ட் பென்ஜமின் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவர்களிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment