Saturday, October 1, 2011

சுனில் ஹந்துன்நெத்தி கிளர்ச்சியாளர்களுடன் ரகசியமாக பேசினார் என்பதை மறுக்கிறது JVP

மக்கள் விடுதலை முன்னணியின் மிகவும் நம்பிக்கையும் கொழும்பு மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவருமான கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கிளர்ச்சியாளர் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக அவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஹந்துன்நெத்தி யவர்கள் விரக்தியுற்றுள்ளதாகவும் கட்சியின் உயர் தலைவர்களால் இவருக்கு நீண்ட காலமாகவே அசாதாரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது காலிமாவட்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார கிளர்ச்சியாளர் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார் ஹந்துன்நெத்தி கிளர்ச்சியாளர் குழுவுடன் இணைந்து கொண்டால் ரில்வின் அணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் இருதசாப்பதங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற பிறேம்குமார் குணரட்ணம் எனப்படுகின்ற ஜேவிபி யின் தலைவர் பிரித்தானியாவிலிருந்து கட்சியினை இயக்கிவந்தவர் எனவும் மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாதுபோனாலும் கட்சியினுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர் என்பது வெளிப்படை உண்மை. இவர் திடீரென நாட்டிற்கு வந்திறங்கியுள்ளதுடன் கட்சியின் தலைப்பீடத்தில் பெரும் சர்சைகளும் உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் தமது கட்சியினுள் இவ்வாறான பிணக்குகள் ஏதும் இல்லையென சோமவன்ச தரப்பினர் மறுத்துவந்தாலும் தற்போது பிளவு ஒன்று உருவாகியுள்ளதாகவும் அதை தாம்தீர்த்து ஒரே குடையின்கீழ் வர சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றபோதும் சமரசம் தொடர்பாக இதுவரை குணரட்ணம் தரப்பினரிமிருந்து எவ்வித செய்திகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையிலேயே ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி மக்கள் விடுதலை முன்னணியின் குமார அணியினருடன் இணைந்து கொள்வதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட முக்கியஸ்த்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவத்துள்ளார்.

தற்போதும் கூட பாராளுமன்ற உறுப்பினர சுனில் ஹந்துன் நெத்தி கட்சியின் சார்பான வேலைத்திட்டங்களை ஆர்வத்துடன் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com