பாராளுமன்ற உறுப்பினர்களிடையே துப்பாக்கிச் சமர். ஒருவர் பலி, மற்றவர் ICU வில்
ஆழும் கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிறேமச் சந்திரவுக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பா.உ பாரத லக்ஷ்மன் உயிரிழந்துள்ளதுடன் பா.உ துமிந்த சில்வா அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகித்தரும் மேலுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி துப்பாக்கிச் சமரில் மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
பா.உ துமிந்த சில்வாவிற்கு நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இன்றைய தினம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இச்சம்பவம்
மேலதிக தொடர்ரும் . . . .
0 comments :
Post a Comment