ஜே.வி.பி யிடையே Cyber War. முடக்கப்பட்ட இணையத்தளம் மீட்கப்பட்டது.
ஜேவிபி இடையே உருவாகியுள்ள உட்கட்சி மோதலையடுத்து அக்கட்சியின் உத்தியோக பூர்வ இணையத்தளமான (www.lankatruth.com ) மக்கள் விடுதலை முன்னணியின் குமார் குணரத்னம் அணியினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. தற்போது ஒருவழியாக அது மக்கள் விடுதலை முன்னணியின் புதிய பிரசாரப் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஜே.வி.பிக்குள் எழுந்த முரண்பாடுகளையடுத்து குறிப்பிட்ட இணையத்தளம் குமார் குணரத்னம் பிரிவினரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் கடந்த 23ம் திகதியிலிருந்து எவ்வித செய்திகளும் வெளிவராகவண்ணம் முடக்கப்பட்டும் இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு திடீரென குறிப்பிட்ட இணையத்தளம் கட்சியின் பிரசாரப் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவரும் அதேவேளை நேற்று அதிகாலை முதல் குறிப்பிட்ட இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அந்த இணையத்தளம் முற்றாகச் செயலிழந்துள்ளது.
இவ்விணையத்தளம் மீது அரசதரப்பால் பைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் உள்வீட்டு பிணக்குகளை முடிமறைக்கும் பிரச்சார உத்தியெனவும், இணையம் உள்வீட்டுச் சிக்கலில் உள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, குமார் குணரத்னம் குழுவினரின் புதிய இணையம் ஒன்று இன்று வெளிவரவுள்ளதாகவும் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment