இமானுவேல் இந்தியாவினுள் நுழைய அனுமதி மறுப்பு. உருத்திரகுமாரன் மீது சந்தேகம்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யபட்டு நேற்று நாடுகடத்தபட்டுள்ளார். இமானுவேல் நேற்று முன்தினம் ஜேர்மனியில் இருந்து இந்தியா சென்றிருந்தார். இந்தியாவில் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாயையும் தமிழ்நாட்டில் உள்ள புலிகளுக்கு ஆதரவானவர்களையும் சந்திப்பதற்கு இவர் நாட்டினுள் நுழைய முனைவதாக அறிந்தே இவர் நாடுகடத்தப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் பயணம்செய்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்திய விசேட அதிகாரிகள் இவருடைய பெயரை ஒலிபெருக்கில் அறிவித்து விமானத்தில் வைத்தே இவரைக் கைது செய்து செய்து எவ்வித தயவு தாட்சணியமும் இன்று மறுவிமானத்திலேயே இவர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டார். இவர் இவ்வாறு மறு விமானத்தில் ஏற்றப்பட்டபோது ஜேர்மனிக்கான இருக்கை உறுதிப்படுத்தப்பட்டிராதபோது மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தனது பயணத்தை எவ்வாறாவது அமைத்துக்கொள்ளுமாறு வேண்டப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது. மேலும் இந்திய ம ண்ணிலிருந்து வெளியேறுகின்ற முதலாவது விமானத்தில் இவர் ஏற்றப்படவேண்டும் என்ற இறுக்கமான உத்தரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் மே18 இன் பின்னரான காலப் பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலக நாடுகளில் இயங்குகின்ற புலிகளின் பினாமி அமைப்புக்கள் யாவற்றையும் ஒருங்கிணைத்து மக்களவை என்ற கட்டமைப்பையும் அதனுடாக உலகத்தமிழர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கம் செய்திருந்தார்.
இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் யாவும் புலிப்பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை ஒத்தவையே என்ற அடிப்படையில் உலகநாடுகள் இவற்றை தடைசெய்யலாம் என கருதப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்கள் தொடர்பானதும், அவர்களின் கடவுச் சீட்டுக்களின் நிழற்பிரதிகள் உட்பட்ட தகவல்களை புலிகளின் ஒரு பிரிவைச் சேர்ந்த உருத்திரகுமாரனால் இந்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிறிதொரு பிரிவினரால் வெளிவரும் பத்திரிகை ஒன்று கடந்த இருவாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான எமது முந்தைய செய்தியை பார்வையிட கிளிக் செய்யுங்கள்.
0 comments :
Post a Comment