தமிழ் வைத்தியர்கள் ஐவரையும் இங்கிலாந்துக்கு அழைப்பதற்கான திட்டம்
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது முல்லை தீவு பிரதேசத்தின் உண்மை நிலையை தொடர்பாக அரசாங்கத்தின் சார்பாக சாட்சியமளித்த தமிழ் வைத்தியர்கள் ஐவரையும் பல கோடி ரூபா பணம் கொடுத்து இங்கிலாந்துக்கு அழைப்பதற்கான திட்டமொன்றை புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பு மேற்கொண்டு வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர்க்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக இணைப்பு வேலையை இந்தியாவில் மேற்கொண்டுள்ளார். இதன்போது வைத்தியர் பலர் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த வைத்தியர்கள் இங்கிலாந்துக்கு வந்தால் சுகபோக வாழ்க்கையை அமைத்துத் தருவதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்னர் வாக்குறுதி அளித்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு வைத்தியர்கள் பலர் விருப்பம் தெரிவிக்காத நிலையில் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
0 comments :
Post a Comment