அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி சம்பந்தன் சந்திப்பு.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஓஹையோ மாநிலப் பிரதிநிதியும், அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்குக்கான காங்கிரஸ் உபகுழுவின் தலைவருமான ஸ்டீவன் சபெட் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் இலங்கையின் இராஜதந்திர மட்டங்களில் பலரை சந்தித்ததுடன் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
காங்கிரஸ் பிரதிநிதி ஸ்டீபன் சபெட்க்கு அமெரிக்க தூதரகத்தில் இராபோசன விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதன்போது இலங்கையில் பல அரசியல் தலைவர்களுடன் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார். இச்சந்தர்பத்தில் சம்பந்தனுடன் அவர் பிரத்தியேகமாக கலந்தாலோசித்ததாக அறியமுடிகின்றது.
இக்கலந்துரையாடலின்போது இலங்கை அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தொடர்பாகவும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது எனவும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அமெரிக்க அரசு கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாகவும் சபெட் தெரிவித்தார் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இவ்வாறான ஒவ்வொரு சந்திப்பின்போதும் சம்பந்தன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கான அமெரிக்க வீசா ஒன்றினை பெற்றுக்கொள்வற்கான முயற்சிகளையே மேற்கொள்வார் எனவும் தமிழ் மக்கள் சார்பான பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டதாக வெளிவரும் செய்திகள் யாவும் முற்றிலும் பொய்யானவை எனவும் எதிர்த்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment