மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் வீதியில் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலி பறிப்பு
வீதியில் தனியாகச்சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுண் நிறைகொண்ட தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். நீர்கொழும்பு ருக்மணிதேவி பூங்கா அருகில் அமைந்துள்ள சென்ஜேசப் ஒழுங்கையில் நேற்று திங்கட்கிழமை (10) பிற்பகல் ஒருமணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நீர்கொழும்பு தலாதூவ தொழிலாளர் வீடமைப்பு தொகுதியை சேர்ந்த வள்ளியம்மை என்ற பெண்ணே சம்பவத்தில் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தனது தங்கச்சங்கிலியை பறிகொடுத்தவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் நகையை பறிகொடுத்த பெண் வைத்தியசாலைக்கு சென்று விட்டு வீடுநோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் கழுத்தில் அணிந்திருந்த நகையை கத்தியொன்றினால் வெட்டியெடுத்துள்ளனர்.
எதிர்பாராதவிதமாக நடந்த இச்சம்பவத்தையடுத்து சுதாகரித்துகொண்ட அந்தப்பெண் அந்த நபருடன் சிறிது நேரம் போராடியுள்ளார் இருந்தபோதும் ஆள்நடமாட்டமில்லாத அந்த வீதியில் அப்போது யாரும் உதவிக்கு வரவில்லை இதனையடுத்து தங்கச்சங்கிலியை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த நிலையிலிருந்த அந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவத்தினால் அப்பெண்ணிற்கு சிறிதளவில் காயம் ஏற்பட்டுள்ளது அவரின் கைப்பையும் அந்த நபர்களினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment