கொரிய மொழித்தேர்ச்சிப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுளள்தாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.
கொரிய மொழித்தேர்ச்சிப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் 9 ஆயிரத்து 300 பேர் கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக தெரிவு செய்யப்படுவார்களென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்ததாக அரசதகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இப்பரீட்சைக்கு 44 ஆயிரத்து 214 பேர் தோற்றினார்கள். பரீட்சையில் மோசடி செய்த குற்றச்சாட்டின்பேரில் பரீட்சைக்குத் தோற்றிய 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment