Saturday, October 22, 2011

மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் உட்பட மூவர் கைது!

தனது மனைவி உட்பட மேலும் ஒரு பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரும் குறிப்பிட்ட இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினையடுத்து உடன் செயற்பட்ட பொலிஸாரே இவர்களைக் கைது செய்துள்ளனர்.

பிலியந்தல மாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான கணவர், விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அவரது 19 வயதான மனைவி மற்றும் 33 வயதான இன்னொரு பெண் ஆகியோரே கைது செய்யப்ட்டவர்களாவர். இவர்கள் இருவரும் மடபாத்தை, இரத்தலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com