Tuesday, October 18, 2011

வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்திறப்பு விழா. (வீடியோ இணைப்பு)

வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் இரு மாடியில் நிர்மாணிக்கப்பட்ட மடஹபொல ஆரம்ப வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும்
வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் .வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொல்பிதிகம பிரதேச சபைத் தவிசாளர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

No comments:

Post a Comment