Thursday, October 6, 2011

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வாறாராம்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்ன் மாத்தாய் வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார். அவர் இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார். இப் பயணத்தின் போது, ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை வரும் 9 ஆம் திகதி சந்தித்து, அரசியல் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்துப் பேச உள்ளார்.

வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்குப் பயணம் செய்வது இதுவே முதற்தடவையாகும்.

இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்தும் மாத்தாய் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமாராவ் பதவி விலகிச்சென்றதன் பின்னர் அந்தப் பதவியைப் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஞ்சன் மாத்தாய் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com