Sunday, October 16, 2011

போதைப்பொருள் வர்த்தகர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனராம்.

பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் பலர் நாட்டை விட்டுவெளியேறியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் பலர் நாட்டை விட்டு சென்றுள்ளனர் என்றார்.

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிலர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். அதே போன்று அண்மையில் ஜனாதிபதியவர்கள் கொழும்பு நகர மக்களை சந்தித்த போது தமது பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்து காப்பாற்றி தரும்படி பெரும் எண்ணிக்கையான தாய்மார்கள் ஜனாதிபதியை கோட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com