Friday, October 7, 2011

அமெரிக்கர்களை சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்ய ரகசிய குழு ஆணையிட முடியும் –

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டாமி விட்டோர் உட்பட ஒபாமாவின் நிர்வாகத் துறை அதிகாரிகள் பலர் அமெரிக்க குடிமகன்களை தேவைப்பட்டால் சட்டத்தின் கண்களை மறைத்துவிட்டு கொலை செய்வதற்கு தனியாக இயங்கிவரும் ரகசிய குழு ஆணையிட முடியும் என்று உறுதிசெய்துள்ளனர்.

மேலும் யாரை வாழவிட வேண்டும் யாரை கொலைச் செய்ய வேண்டும் என்று ரகசிய குழு எவ்வாறு முடிவு செய்யும் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் டாமி விட்டோர். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இதுவரை அமெரிக்கரும் மற்றும் மத போதகருமான அன்வர் அவ்லாகியை மட்டும்தான் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த ரகசிய குழு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கழகத்தின் கீழ் இயங்குகிறது என்றும் நடைமுறையில் இருக்கும் அமெரிக்க சட்டங்கள் இக்குழுவுக்கு பொருந்தாது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இவ்வாறு அமெரிக்க அரசியல் சட்டத்திற்கு வெளியே இயங்கிவரும் இந்த ரகசிய குழு அமெரிக்க குடிமக்களை துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா தற்போது கொலை செய்துள்ள அன்வர் அவலாகி போன்ற மத தலைவர்களையும் தன்னுடைய கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பத்திரிக்கைகளையும் குறிவைக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com