தீபாவளித்தினமான நேற்றைய தினம் வீடொன்றில் பட்டாசு கொளுத்தி தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள்இ கொளுத்திய பட்டாசு ஒன்று பக்கத்து வீட்டு வளவினுள் சென்று வெடித்தனால் கோபமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பட்டாசு கொளுத்திய இரண்டு பேரையும் பிடித்து காற்றடிக்கும் 'பம்' மூலம் தாக்கியுள்ள சம்பவம் மாதகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருசிறுவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பிரதான வீதி, மாதகலில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த அ.ராகுலன்(வயது 18), அ.நவநீதன்(வயது 9) ஆகியோரே தலையிலும், உடம்பிலும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment