Thursday, October 6, 2011

சுண்ணாகம் பிரதேச சபைத் தலைவரின் ஜாதிவெறிக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் .

(படங்கள் இணைப்பு)

சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு ஒன்றும் தெரியாதாம்.

சுண்ணாகம் பிரதேச சபையின் தலைவர் பிரகாஷ், பிரதேச சபையின் சிற்றூழியர் ஒருவர் மீது ஜாதிரீதியான பாரபட்சம் காட்டியமையை அடுத்து பிரதேசத்தில் பெரும் பதட்ட நிலையுடன் கூடிய ஆhப்பாட்டம் ஒன்று அங்கு வெடித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: சுண்ணாகம் பிரதேச சபையினால் சாரதி ஒருவருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரதேச சபையில் நீண்ட நாட்கள் சிற்றூழியராகவிருந்த நபர் ஒருவர் மேற்படி சாரதி தொழிலுக்கு விண்ணப்பித்தபோது, அந்நபரின் ஜாதியினை ஞாபகப்படுத்திய பிரதேச தலைவர் நீங்கள் கூட்டுவதற்கும் துறைப்பதற்குமே பிறந்தவர்கள் அதைதவிர்ந்த வேலைகளை செய்யமுடியாது என அவரது விண்ணப்பத்தை நிராகரிக்ததை அடுத்தே அங்கு மேற்படி பதட்ட நிலைமை தோன்றியுள்ளதுடன், ஆர்ப்பாட்டகாரர்கள் நாளையும் தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதேநேரம் குறிப்பிட்ட விண்ணப்பத்தை ஏற்று அவரை சாரதி சேவையில் இணைத்துக்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களை இலங்கைநெற் தொடர்புகொண்டு கேட்டபோது பிரதேச சபை தலைவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதற்கு அப்பால் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.







1 comments :

Anonymous ,  October 8, 2011 at 12:38 AM  

சாதி திமிர் பிடித்தவர்கள் நோர்வேயிலும் இருக்கின்றனர். பழைய புலிகளின் ஏவல் நாயான உத்தை சேது நோர்வேயில் ஒரு சாதி வெறியன். தனது பெயரை மாத்தி வெள்ளை சேதுவாக திரிகின்றான்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com