நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் மற்றும் பொய் தகவல்களை வெளியிடுகின்ற இணையத்தளம்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஊடக துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கனேகல தெரிவித்துள்ளார். இது போன்ற இணையத்தளம்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்தியை வெளியிடும் பல இணையத்தளம்கள், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் இவை எமது நாட்டில் இருந்து செயற்படுவதாகவும் , இன்னும் சில இணையத்தளம்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுவதாகவும் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் ஊடக துறை அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment