Monday, October 24, 2011

மேற்குலகம் வளங்கள் உள்ள நாடுகளை அடிமைப் படுத்துகிறது. சாடுகின்றார் சுசில் பிறேமஜெயந்த

மேற்கின் பலசாளிகள் என கூறிக்கொள்ளும் சில நாடுகள், சர்வதேச அமைப்புகளுடாக, வளங்கள் உள்ள நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு, முயற்சித்து வருவதாக, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார். எண்ணெய் வளம் காரணமாகவே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இதற்கு பல்வேறு உதாரணங்களை நோக்கலாம். அவ்வாறு வளங்கள் உள்ள நாடுகளை அடிமைப்படுத்தி, அங்குள்ள எண்ணெய் வளத்தை சூறையாடும் முயற்சியில், அந்த வல்லரசு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இன்று, அவர்கள் வேறு வடிவில் இந்நாடுகளை சுரண்டுவதற்கு, முற்பட்டுள்ளார்கள். பலம் வாய்ந்த நாடுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, பல்வேறு அமைப்புகளை பயன்படுத்துகின்றன.

இலங்கை தேசிய முன்னணியின் 10 ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார். சம்மேளனம், கொழும்பு நகர மண்டபத்தில இடம்பெற்றது. இலஙகை தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ இணையதளத்தையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். மகா சங்கத்தினர், இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி வீமல் கீகனகே உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment