Friday, October 28, 2011

வவுனியாவில் இடம்பெற்றுவரும் கொள்ளச் சம்பவங்களின் பின்னணியில் நெருப்பின் சகாக்கள்

யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் ஒர் அமைத்திச்சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்கள் வடகிழக்கில் பரவலாக தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர். இந்த வகையி ல் வவுனியாவில் அண்மைக்காலமாக கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம் , கொந்தராத்துக்கு ஆட்களை அடித்தல் , வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.

மேற்படி குற்றச்செயல்களின் பின்னணியில் வவுனியாவில் முன்னொரு காலத்தில் புலிகளின் புலனாய்வுத்துறைப் செயற்பாட்டாளராகவிருந்த நெருப்பு என்பவனின் சகாக்கள் உள்ளதாக தெரியவருகின்றது.

நெருப்பு என்பவன் வவுனியாவில் புலிகளின் புலனாய்வுச் செயற்பாட்டாளனாக இருந்தபோது தனது சகாக்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டமைக்காக புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த பொட்டுவால் நெருப்பு அல்பா 5 எனப்படுகின்ற தளத்தில் அமைந்திருந்த குற்றம் புரியும் உறுப்பினர்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பின்னர் வன்னியல் யுத்தம் உக்கிரமடைந்தபோது ஏற்பட்ட ஆட்பற்றக்குறை காரணமாக சிறையிலிருந்த அனைத்துக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு போர் முனைக்கு அனுப்பபட்டபோது, நெருப்பும் போர் முனையில் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

மேற்படி நெருப்பின் சகாக்களான குகன் (குமான்குழம்) சரா (பண்டாரிக்குழம்) வெட்டு ரமேஸ் என்போர் 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா , மற்றும் மத்திய கிழக்கு நாடான கட்டார் என்பவற்றுக்கு தப்பி ஓடினர். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதாரண நிலையில் நாடு திரும்பியுள்ள இவர்கள் மேற்படி சட்டவிரோ செயல்களில் ஈடுபட்டு வருகினறனர்.

இவர்களுக்கு சிறை செல்வதும் மீண்டுவருவதும் சாதாரண அன்றாட நிகழ்வுகளாகவே காணப்படுகின்றது. சிறையினுள் தமக்கெனவோர் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டுள்ள இவர்கள் ஜெயிலிலும் மிக சுகபோக வாழ்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது எவரும் பேச விரும்பாத ரகசியங்களாகவுள்ளது.

இவர்களது குற்றச் செயல்களை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் எவராவது பொலிஸாரிடம் முறையிட்டு இவர்கள் விளக்க மறியலுக்கு சென்று விட்டால் சிறையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்து முறைப்பாட்டாளர்களை மிரட்டி வழக்குகளை வாபஸ் பெறச் செய்யும் அளவுக்கு இவர்களது குற்றவியல் வலைப்பின்னல் (நெட்வேர்க் ) விருத்தியடைந்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் தேர்தல் என்று வந்துவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக தேர்தல் பிரச்சார வேலைகளிலும் இவர்கள் ஈடுபடுவர். இவ்வாறு செயற்படும் இவர்கள் குற்றச் செயல்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலை செய்யவும் முயற்சிகளை மேற்கொள்வர். அத்துடன் கைதுகளுக்கு இனவாத முலாமும் பூசுவர் என்ப தும் இவ்வாறே குற்றவாளிகள் சமுதாயத்தில் வழர்சி பெறுகின்றனர் என்பது வேதனை தரும்விடயங்களாகவுள்ளது.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com