தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றது. பிராசர நடவடிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்ததும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்களிப்பு நடைபெறவுள்ள எட்டாம் திகதி சனிக்கிழமை பொலிஸார் மாத்திரமே வாக்குச் வாசடிகளில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் இராணுவத்தினர் வாக்குச் சாவடியில் இருந்து இரண்டு மைல் தொலைவுக்கு அப்பால் கடமையில் ஈடுபடுவர் எனவும் தேர்தல்கள் ஆணாயாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிகளவிலான கட்சி ஆதரவாளர்கள் பங்குகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதனால் முப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்வுள்ளனர்.
...............................
0 comments :
Post a Comment