தமிழர் என்ற காரணத்திற்காக ஜோன் ராமுக்கு பிரதி மேயர் பதவி மறுக்கப்பட்டது.
கொழும்பு மாநகர மேயர் முஸம்மில்: பிரதி மேயர் டைட்டஸ் – ரணில் அறிவிப்பு
கொழும்பு மாநகர சபையின் மேயாராக ஏ.ஜே.எம் முஸம்மில் பிரதி மேயராக டைட்டஸ் பெரேரா ஆகியோரின் பெயர்களை பிரேரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொழும்பு நகரம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும். நகரில் வாழும் சகல மக்களினதும் அடிப்டை உரமைகள் காப்பாற்ற வேண்டியது மேயரின் பொறுப்பாகும். மக்களை அச்சுறுத்தி மக்ளை அழித்தொழிக்கும் நகரமல்ல இது. கட்சியின் தீர்மானத்தின்படி கொழும்பு மாநகர சபையின் மேயாராக ஏ.ஜே.எம் முஸம்மிலையும் முன்னர் எடுத்த தீர்மானத்தின்படி அதிகூடிய விருப்பு வாக்குகள்பெற்ற சிங்கள வேட்பாளர் என்ற அடிப்டையில் பிரதி மேயராக டைட்டஸ் பெரேராவையும் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம் என்றார்.
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் முஸம்மில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு 54ஆயிரத்தி 448 எட்டு வாக்குகளையும் டய்டஸ் பேரெரா 8,732 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதேவேளை, ஐதேகவின் தமிழ் வேட்பாளராக ஜோன் ராம் 9,966 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐதேக விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தபோதும் இவருக்கு பிரதி மேயர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை இலங்கைநெற் தொடர்புகொண்டு வினவியபோது, கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்ததன் பிரகாரம், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் சிங்களவர் ஒருவருக்கு பிரதி மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்சியின் இம்முடிவினை ராம் ஏற்றுக்கொண்டுள்ளாரா எனக் கேட்டபோது, அவர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமெனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment