பூடான் மன்னர் ஜிக்மே கீசர் நாம்கியால் சாதாரண குடும்ப பெண்ணை மணந்தார்.
பூடான் மன்னர் ஜிக்மே கீசர் நாம்கியால் வாங்சுக், சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார்.இந்தியாவின் அண்டை நாடான பூடானின் இளம் மன்னர் நாம்கியால் வாங்சுக், 31. இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர். இவர் 21 வயதான ஜெட்சன் பெமாவை காதலித்து வந்தார். பெமா, இமாச்சல பிரதேசத்தில் படித்தவர். இவரது தந்தை விமானியாக உள்ளார்.தலைநகர் திம்புவிலிருந்து, 71கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனாகா கோட்டையில், இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்தது. 300 விருந்தினர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
இவரது தந்தை, ஐந்தாண்டுகளுக்கு முன் இவரிடம் அரச பதவியை ஒப்படைத்தார். இவர் தந்தை வாங்சுக்குக்கு நான்கு மனைவிகள். நான்கு மனைவிகளுடன் வந்து அவர் நேற்று திருமணத்தில் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் புத்தமத சடங்குகளின் படி, மன்னர் ஜிக்மேயின் திருமணம் நடந்தது. இந்திய தூதர் பவன் கே வர்மா, மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.தந்தையைப் போல அல்லாது அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர் இளம் மன்னர் வாங்சுக். இதனால், ஏராளமான பழங்குடி மக்கள் இவரது திருமணத்தை காண, 17ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை முன் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்திருந்தனர். இவரது திருமணம் "டிவி' யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பூடானின் 7 லட்சம் மக்களும் கண்டு களித்தனர்.
0 comments :
Post a Comment