ஜே.வி.பியின் புதிய வார இதழ் விரைவில் வெளியீடு
ஜே.வி.வி புதிய வார இதழ் ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜே.வி.பிக்குள் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாக உத்தியோகபூர்வமான பத்திரிகையாக வெளிவந்த கொண்டிருந்த “லங்கா” என்ற வார இதழை கட்சியின் போட்டிக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் ஜே.வி.பியின் தலைமைப்பீடம் "ஜனரல்ல” என்ற பெயரில் புதிய பத்திரிகை ஒன்றை வெளியிட திர்மானித்துள்ளது. ஜனரல்ல என்ற பத்திரிகையை புதிய பரிணாமத்துடன் வெளியிடுவது என்று லங்கா பத்திரிகையின் பிரதம அசிரியர் சந்தன சிறீமால்வத்த தெரிவித்துள்ளதோடு, வெளிவரவுள்ள ஜனரல்ல பத்திரிகை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment