தந்தையை அடித்துக்கொன்ற புதல்வர்கள் கைது.
ஹபரணைப் பிரதேசத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரை அடித்து கொலைசெய்தமைக்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் இறந்தவரின் புத்திரர்கள் எனவும் மூன்றாமவர் சகோதரனின் புதல்வர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினை ஒன்றில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி கொலையில் முடிவடைந்துள்ளது. படுகாயமடைந்த நபர் நேற்று 7ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
0 comments :
Post a Comment