Tuesday, October 25, 2011

ஜேர்மனிய செய்மதியின் சிதறிய பாகம்கள் இலங்கையில் விழுந்தன ?

விண்வெளியில் செயலிழந்த ஜேர்மனிய ரோஸ்ட் ஆய்வு செய்மதியின் எரிந்த பாகம்கள் தென்கிழக்க ஆசியாவில் ஞாயிற்றுக்கிழமை விழுந்திருக்கலாம் என ஜேர்மனிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மணிக்கு 280 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தை வந்தடைந்த மேற்படி செய்மதியானது எரிந்த துண்டுகளாக சிதறியுள்ளன. அவ்வாறு சிதறிய மொத்தமாக 1.87 தொன்கள் நிறையுடை 30 பாகம்கள் பூமியை வந்தடைந்துள்ளன.

ஆனால் இந்த செய்மதியின் பாகம்கள் எங்கு விழுந்தன என்பது இதுவரை அறியப்படவில்லை. அமெரிக்க இராணுவ தரவுகளின் கணிப்பீட்டின் பிரகாரம் இந்த செய்மதியின் பாகம்கள் இலங்கையின் கிழக்கே இந்து சமுத்திரத்திலும், மியன்மாரின் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அல்லது சீன நிலப்பகுதிகளிலும் விழுந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

1990 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செய்மதி 1999ஆம் ஆண்டு செயலிழந்த நிலையில் பூமியின் சுற்றுவட்ட பாதையை வலம் வந்தது. எனினும் இந்த செய்மதியின் பாகம்கள் மக்கள வாழும் பிரதேசம்களில் விழவில்லை என எதரிவிக்கப்படுகிறது. மேலும் ஐரோப்பா ஆபிரிக்க ஆவுஸ்திரேலியாவுக்கு இந்த செய்மதியால் பாதிப்பில்லை என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment