ஊழியர் சேமலாப நிதியத்தை, பிறிதொரு தரப்பினரிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லை....
ஊழியர் சேமலாப நிதியத்தை, பிறிதொரு தரப்பினரிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லையென, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தை, புதிய இடத்தில் ஏற்படுத்தும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு-01, சேர். பாரோன் ஜயதிலக மாவத்தையில் உள்ள லொயிட்ஸ் கட்டிடத்தில் ஊழியர் சேமலாப திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இதனை திறந்து வைத்தார். இதுவரை காலமும் செலிங்கோ கட்டிடத்தில் அமைந்திருந்த ஊழியர் சேமலாப திணைக்களத்தில், மக்கள் தொடர்பு பிரிவு, அங்கத்துவ கட்டணம், காசோலைகள் கையளிப்பு ஆகியன, இன்று முதல் புதிய கட்டிடத்தினூடாக, மேற்கொள்ளப்படும்.
பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், இங்கு வந்து எமக்கு பல ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். ஊழியர் சேமலாப நிதியத்தை, கம்பனிகளிடம் கையளிக்குமாறு, அவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால், இதனை வெளிநாட்டு கம்பனிகளுக்கோ அல்லது வேறு எவருக்கோ வழங்குவதற்கு, கடுகளவேனும் எம்மிடம் திட்டங்கள் இல்லையென்பதை, நாம் தெளிவாக குறிப்பிட்டோம். நாட்டு மக்களுக்கும், இதனை கூறுகின்றோம். ஏனையோருக்கும் இதனை தெரிவிக்கின்றோம். எமக்கு ஆலோசனை வழங்க வருகின்றவர்களுக்கும், நாம் இதனையே தெரிவிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸித்தீக் ஹனீபா
0 comments :
Post a Comment